Wiki o Kurowie
Advertisement
Nowy herb Kurowa
KurówPoland

போலந்தில் குரோவ் நகரம்

குரோவ் ( Kurów) தென் கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். 2,782 (2006 ஆம் ஆண்டில்) மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

வரலாறு[]

1431 க்கும் 1442 க்கும் இடையில் இக்கிராமத்துக்கு நகரத்துக்கான உரிமை வழங்கப்பட்டது. அயல் நகரங்களில் இருந்து உணவு வணிகம் நடைபெறும் முக்கிய நகராக இருந்து வந்தது. பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இந்நகரத்தில் அமைந்திருந்தன. 16ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மத போதனைகளில் ஒன்றான கல்வினிசம் (Calvinism) இங்கு பரவியிருந்தது. 1660களில் இக்கிராமத்தின் பலரும் ஆரியனிசத்தைப் ([1]) பின்பற்றினர்.

1795 இல் இந்நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1815இல் போலந்துடன் இணைக்கப்பட்டது. 1831 பெப்ரவரியில் இங்கு இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, ஜோசப் துவெர்னிக்கி தலைமையிலான போலந்துப் படையினர் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர். 1870 இந்நகரம் தனது நகர அந்தஸ்தை இழந்தது. இன்றும் அந்த அந்தஸ்தை மீளப் பெற முடியவில்லை.

செப்டம்பர் 9, 1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் இந்நகரம் ஜெர்மனியரின் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. மருத்துவமனை மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சில் பலர் கொல்லப்பட்டனர்.

போலந்தின் முன்னாள் கம்யூனிசத் தலைவரும் அதிபருமான ஜாருசெல்ஸ்கி இக்கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kosciol1

1482 இல் கட்டப்பட்ட கிறிஸ்தவத் தேவாலயம்










  1. கி.பி. 4ஆம் நூற்றண்டில் எகிப்தில் வாழ்ந்த ஆரியுஸ் (Arius) என்னும் எகிப்திய மதகுருவின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள்.
Advertisement